பேரம்பாக்கம் அருகே ஓசியில் மது வாங்கி தர மறுத்த வெல்டரை தாக்கியவர் கைது

பேரம்பாக்கம் அருகே ஓசியில் மது வாங்கி தர மறுத்த வெல்டரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2019-08-09 22:30 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள புதுமாவிலங்கையை சேர்ந்தவர் கவியரசன் (வயது 34). வெல்டர். நேற்று முன்தினம் கவியரசன் வேலையின் காரணமாக சத்தரை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த புதுமாவிலங்கையை சேர்ந்த இளஞ்செழியன் என்கிற கருப்பு (40) தனக்கு ஓசியில் மது வாங்கித்தருமாறு அவரை கேட்டுள்ளார்.

அதற்கு கவியரசன் மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த இளஞ்செழியன் அவரை தகாத வார்த்தையால் பேசி, அருகில் கிடந்த இரும்பு கம்பியால் தாக்கினார்.

மேலும் உன்னை அடித்து கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த கவியரசன் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக பூந்தமல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கவியரசனின் மனைவி காயத்திரி மப்பேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளஞ்செழியனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்