தொடர் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் சீறிப்பாய்ந்த வெள்ளம்; 2 பாலங்கள் வழியாக வாகன போக்குவரத்துக்கு தடை
தொடர் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் சீறிப்பாய்ந்தது. இதனால் 2 பாலங்கள் வழியாக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் காலை முதல் தூறலுடன் மழை தொடர்ந்து பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. விடிய, விடிய மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் தேங்கியது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி திருப்பூர் மாநகரில் 44 மில்லி மீட்டரும், அவினாசியில் 45 மில்லி மீட்டரும், பல்லடத்தில் 59 மில்லி மீட்டரும், காங்கேயத்தில் 29 மில்லி மீட்டரும், தாராபுரத்தில் 40 மில்லி மீட்டரும், மூலனூரில் 27 மில்லி மீட்டரும், உடுமலையில் 70 மில்லி மீட்டரும், திருமூர்த்தி அணைப்பகுதியில் 130 மில்லி மீட்டரும், அமராவதி அணைப்பகுதியில் 68 மில்லி மீட்டரும் மழை பதிவானது.
நேற்று முன்தினம் மழை தொடர்ந்ததால் மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி வீட்டுக்கு திரும்பினார்கள். விடிய, விடிய மழை தொடர்ந்ததால் மாணவ-மாணவிகளின் நலன் கருதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேற்று விடுமுறை அறிவித்தார்.
இதனால் பள்ளிகள் செயல்படவில்லை. ஆனால் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் நேற்று வழக்கம் போல் செயல்பட்டன.
நேற்று காலை முதல் தூறலுடன் மழை பெய்தது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் ரோடுகளில் சிரமத்துடன் சென்றனர். பெரும்பாலானவர்கள் குடைபிடித்தபடியும், மழை கோட் அணிந்தபடியும் வீதியில் நடமாடினார்கள்.
கோவை மாவட்டத்தில் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் திருப்பூர் பகுதியில் நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. நேற்று முன்தினம் இரவு முதல் நொய்யல் ஆற்றில் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது. இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் நொய்யல் ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துடன் நொய்யல் ஆற்றில் பாய்ந்த வெள்ளத்தை கண்காணித்தனர்.
நேற்று காலை 8 மணிக்கு மேல் நொய்யல் ஆற்றில் வெள்ளத்தின் அளவு அதிகரித்தது. ஈஸ்வரன் கோவில் நொய்யல் பாலத்தை ஒட்டியபடி வெள்ளம் சீறிப்பாய்ந்ததால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர். பாலத்தின் இருபுறமும் இரும்பு தடுப்புகள் வைத்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
இதுபோல் மங்கலம் ரோடு, காலேஜ் ரோட்டை இணைக்கும் அணைப்பாளையம் தரைப்பாலம் நேற்று வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் அந்த வழியாக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. திருப்பூர் மத்திய போலீசார் பாலப்பகுதியில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். மேலும் வாகனங்களை அந்த வழியாக செல்ல அனுமதிக்காமல் திருப்பி விட்டனர்.
அணைப்பாளையம் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்ந்தது. திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் அணைப்பாளையம் தரைப்பாலத்தை பார்வையிட்டதுடன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் பாலம் வழியாக வாகனங்கள், மக்கள் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். மேலும் அணைமேடு தடுப்பணை நிரம்பி நொய்யல் ஆற்றில் வெள்ளம் பாய்ந்தது.
மங்கலத்தை அடுத்த சுற்றுவட்டார பகுதிகளான நடுவேலம்பாளையம், பூமலூர், இடுவாய், 63 வேலம்பாளையம், இச்சிப்பட்டி, சாமளாபுரம், சின்னபுத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் தூறலுடன் மழை பெய்தது.
மங்கலம் நால்ரோடு அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே நல்லம்மன் தடுப்பணை உள்ளது. நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நல்லம்மன் தடுப்பணை நிரம்பி வெள்ளம் நுரையுடன் பாய்ந்தது. தடுப்பணையின் கரையோரம் உள்ள நல்லம்மன் கோவிலை மூழ்கடித்தபடி தண்ணீர் சென்றது. கோவிலின் மேற்கூரை மட்டும் வெளியே தெரிகிறது.
மங்கலம் நால்ரோடு அருகே உள்ள நொய்யல் மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டு இருந்த பழைய தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. நொய்யல் பாலம் கட்டுவதற்கு முன்பு இந்த தரைப்பாலத்தை மக்கள் பயன்படுத்தி வந்தனர். அந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
மங்கலம் பகுதியில் நொய்யல் ஆற்றில் வெள்ளம் வெள்ளை நுரையோடு பாய்ந்தது. சாயக்கழிவு பொருட்கள் கலப்பால் வெள்ளை நுரையாக காட்சியளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மழையின் காரணமாக மாவட்டத்தில். பல இடங்களில் மரங்கள் சரிந்ததால் மின்தடை ஏற்பட்டது. அதை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.