புதிய டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா பதவி ஏற்பு: கவர்னர், முதல்-அமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்
புதுவை மாநில புதிய டி.ஜி.பி.யாக பாலாஜி ஸ்ரீவஸ்தவா பதவி ஏற்றார். கவர்னர், முதல்-அமைச்சரை சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார்.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த சுந்தரி நந்தா டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய டி.ஜி.பி.யாக பாலாஜி ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டார். இதனைதொடர்ந்து சுந்தரி நந்தா கடந்த மாதம் 31-ந் தேதி விடைபெற்றார். இந்த நிலையில் புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்ட பாலாஜி ஸ்ரீவஸ்தவா நேற்று காலை வந்தார்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு வந்த அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். அதனை ஏற்றுக்கொண்ட பின் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு சென்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு போலீஸ் ஐ.ஜி.சுரேந்தர்சிங் யாதவ், டி.ஐ.ஜி. ஈஸ்வர் சிங், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள காவல்துறை மியூசியம், கருத்தரங்கக்கூடம் ஆகியவற்றை பாலாஜி ஸ்ரீவஸ்தவா பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘புதுவை காவல்துறையை தொழில்நுட்ப ரீதியாக மாற்றி அமைப்பேன். காவல் துறையை மேம்படுத்துவது குறித்து புதிய திட்டங்கள் வகுக்கப்படும். இன்னும் 2 நாட்களில் அதிகாரிகளை சந்தித்து பேசியபின் மற்ற விவரங்களை தெரிவிக்கி றேன்’ என்றார்.
அங்கிருந்து புறப்பட்டு சட்டசபை வளாகத்திற்கு பாலாஜி ஸ்ரீவஸ்தவா சென்றார். அங்கு முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் கிரண்பெடியை சந்தித்துப் பேசி அவரிடமும் வாழ்த்து பெற்றார்.