19 தாசில்தார்கள் பணியிட மாற்றம் கலெக்டர் நடவடிக்கை

திருச்சி மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 19 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2019-08-07 23:00 GMT
திருச்சி,

மணப்பாறை தாசில்தார் சித்ரா திருச்சி மேற்கு தாசில்தாராகவும், திருச்சி விமான நிலைய விரிவாக்கம் நிலம் எடுக்கும் தனி தாசில்தார் ஞானமிர்தம் மணப்பாறை தாசில்தாராகவும், மருத்துவ விடுப்பு முடிந்த தாசில்தார் கருணாகரன் துறையூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், திருச்சி கனிம வள தாசில்தார் சிவசுப்பிரமணியபிள்ளை, கலெக்டர் அலுவலக குற்றவியல் மேலாளராகவும், மருங்காபுரி சமூக பாதுகாப்புதிட்ட தாசில்தார் வாசுதேவன் திருச்சி கனிம வள தனி தாசில்தாராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மணப்பாறை சிப்காட் தொழிற்பூங்கா நிலம் எடுக்கும் தனி தாசில்தார் சாந்தகுமார் மருங்காபுரி சமூக பாதுகாப்பு திட்டத்திற்கும், ஸ்ரீரங்கம் முத்திரை கட்டண தனி தாசில்தார் ரவி திருச்சி விமான நிலைய விரிவாக்க பணி நிலம் எடுக்கும் பிரிவுக்கும், திருச்சி கிழக்கு உணவு பொருள் வழங்கல் தாசில்தார் சாந்தி ஸ்ரீரங்கம் முத்திரை கட்டண பிரிவுக்கும், பொன்மலை நகர நிலவரி திட்ட தனி தாசில்தார் சந்திரகுமார் தொட்டியம் சமூக பாதுகாப்பு திட்டத்திற்கும், தொட்டியம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ரவிசங்கர் பொன்மலை நகர நிலவரி திட்டத்திற்கும், பறக்கும் படை தனிதாசில்தார் மணிகண்டன் திருச்சி முத்திரை கட்டண தனி தாசில்தாராகவும், திருச்சி முத்திரை கட்டண தனி தாசில்தார் ராமசாமி பறக்கும் படை தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.

திருச்சி மேற்கு தாசில்தார் ராஜவேல் திருச்சி- காரைக்குடி பிரிவு தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுக்கும் தனி தாசில்தாராகவும், திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுக்கும் தாசில்தார் சுமதி, திருச்சி கிழக்கு உணவு பொருள் வழங்கல் தாசில்தாராகவும், மணப்பாறை காகித ஆலை நிலம் எடுக்கும் தாசில்தார் ரேணுகா திருச்சி கலால் உதவி ஆணையராகவும், திருச்சி கலால் உதவி ஆணையர் அருள் ஜோதி மண்ணச்சநல்லூர் சமூக பாதுகாப்பு திட்டத்திற்கும், திருச்சி மாவட்ட கூடுதல் வரவேற்பு தாசில்தார் கலைவாணி திருவெறும்பூர் சமூக பாதுகாப்பு திட்டத்திற்கும், திருவெறும்பூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அகிலா திருச்சி வரவேற்பு கூடுதல் தாசில்தாராகவும், மண்ணச்சநல்லூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சாந்தி திருச்சி மேற்கு உணவு பொருள் வழங்கல் தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

ஒரே நேரத்தில் 19 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சிவராசு நடவடிக்கை எடுத்து உள்ளார்.

மேலும் செய்திகள்