வானவில் : ஜியோமி போன் கிரிப்

இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன்கள் தொழில்நுட்பக் கோளாறால் செயல்படாமல் போவது குறைவு. ஆனால் கைதவறி கீழே விழுந்து பேனல் உள்ளிட்டவை உடைந்து ரிப்பேராவது அதிகம்.

Update: 2019-08-07 12:34 GMT
விலை உயர்ந்த போன் கை தவறி கீழே விழுந்து உடையும் போது மனதும் உடைந்து போவது இயல்பே. இதைத் தவிர்க்கும் வகையில் ஸ்மார்ட்போனைத் தயாரிக்கும் ஜியோமி நிறுவனம் போன் கீழே விழுவதைத் தடுக்கும் வகையில் போன் கிரிப்களை அறிமுகப்படுத்தியுள்ளது. எம்.ஐ. பிளெக்ஸ் போன் கிரிப் என்ற பெயரில் வந்துள்ள இவற்றின் விலை ரூ.149.

மற்றவர்களுடன் போன் பேசும்போதும், போனை கையிலெடுத்துச் செல்லும்போதும் கீழே விழாமல் தடுக்க இந்த கிரிப் உதவும். ஸ்மார்ட்போனின் பின் பகுதியில் ஒட்டிவிட்டு, அந்த கிரிப்பினுள் விரலை நுழைத்தபடி பிடித்துச் சென்றால் கீழே விழுவதைத் தவிர்க்கலாம். இது டிரை பாலியுரித்தேனால் ஆனது. இதில் ஸ்மார்ட் போனில் உறுதியாக ஒட்டிக் கொள்ளும் வகையிலான பசை உள்ளது. இதனால் கிரிப்பிலிருந்து போன் விழுவது கிடையாது. நீலம், கருப்பு, சிவப்பு ஆகிய வண்ணங் களில் மேட் பினிஷில் இது வந்துள்ளது. பல ஆயிரம் கொடுத்து ஸ்மார்ட்போனை வாங்குவோர் அதைப் பாதுகாக்க குறைந்த அளவில் செலவு செய்வது சரிதானே.

மேலும் செய்திகள்