வானவில் : எலெக்ட்ரிக் டூத் பிரஷ்

சுய பராமரிப்பில் மிக முக்கியமான உறுப்பாகத் திகழ்வது வாய். பெரும்பாலான நோய்களுக்குக் காரணமாக இருப்பதும் வாய்.

Update: 2019-08-07 12:04 GMT
இதனால் வாய் அது சார்ந்த பற்களை சுத்தமாக பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். வழக்கமாகப் பயன்படுத்தும் டூத் பிரஷ்களின் மேம்பட்ட ரகமாக வந்துள்ளதுதான் ரீசார்ஜபிள் டூத் பிரஷ். இதை 4 மணி நேரம் சார்ஜ் செய்தால் 30 நாட்கள் செயல்படும். பேரிவில் எலெக்ட்ரிக் டூத் பிரஷ் என்ற பெயரில் வந்துள்ள இந்த பிரஷ்சின் விலை ரூ.2,299 ஆகும்.

இது மிகவும் சிறப்பாக செயல்பட்டு பற்களில் படிந்துள்ள கறைகளை போக்குகிறது. வழக்கமாக கைகளால் தேய்க்கும் பிரஷ்ஷை விட இது பல மடங்கு சிறப்பாக செயல்படக் கூடியது. 5 ஆண்டுகள் உழைக்கும் இந்த மாடல் பிரஷ்ஷுக்கு ஓராண்டு உத்தரவாதத்தை இந்நிறுவனம் அளிக்கிறது.

இதில் 5 வகையான செயல்பாடுகள் உள்ளன. பற்களுக்கும், ஈறுகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இது செயல்படும். இது நீண்ட நேரம் செயல்படும் என்பதால் வெளியூர் பயணம் செல்வோர் சார்ஜரை எடுத்துச் செல்லவேண்டிய அவசியம் ஏற்படாது. இந்த டூத் பிரஷ்சுடன் கூடுதலாக 3 பிரஷ்களும் அளிக்கப்படுகின்றன.

இந்த பிரஷ் நுனிகள் நைலானால் ஆனது. இவற்றைப் பாதுகாப்பாக வைப்பதற்கு மூடிகளும் வழங்கப்படுகின்றன. எளிதில் கீழே விழாத வகையில் இதன் வடிவமைப்பு உள்ளது.

மேலும் செய்திகள்