தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பு; பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தனுஷ்கோடி பகுதியில் கடல் கொந்தளிப்பு நேற்றும் நீடித்தது. பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
ராமேசுவரம்,
ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் கடந்த ஒரு வாரமாகவே வழக்கத்துக்கு மாறாக பலத்த காற்று வீசி வருவதுடன், கடல் கொந்தளிப்பாகவே காணப்படுகிறது. நேற்றும் ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் பகுதியில் பலத்த காற்று வீசியது.
இதனால் எம்.ஆர்.சத்திரம் பகுதியில் இருந்து கம்பிபாடு, அரிச்சல்முனை வரை செல்லும் சாலையை பல இடங் களில் கடல் மணல் மூடியது. தனுஷ்கோடிக்கு சென்ற ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் மணலில் சிக்கிக்கொண்டதால், சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர். எம்.ஆர்.சத்திரம் மீன்பிடி துறைமுகத்தையும் தாண்டி கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக சீறி எழுந்து சிதறின.
கடல் கொந்தளிப்பு நீடித்ததால் ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் நேற்று 4-வது நாளாக மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
எனவே 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 800-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன.
ஒடிசா மாநிலத்தில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் வங்க கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதை தொடர்ந்து, பாம்பனில் உள்ள துறைமுக அலுவலகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.