பாபநாசம் அகஸ்தியர் அருவி தடாகத்தில் மூழ்கிய என்ஜினீயர் பிணமாக மீட்பு
பாபநாசம் அகஸ்தியர் அருவி தடாகத்தில் மூழ்கிய என்ஜினீயர் நேற்று பிணமாக மீட்கப்பட்டார்.
விக்கிரமசிங்கபுரம்,
மதுரை மாவட்டம் திருமங்கலம் கல்லுப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருணாசலம் மகன் சத்தியமூர்த்தி (வயது 27). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தார்.
இந்தநிலையில் இவரும், அவரது உறவினர் மற்றும் நண்பர்கள் மொத்தம் 16 பேர் கடந்த 2-ந் தேதி இரவு குற்றாலம் வந்தனர். பின்னர் இவர்கள் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு அகஸ்தியர் அருவிக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்கு அருவியில் 5 பேர் குளிக்க சென்றனர்.
மற்ற அனைவரும் அருவிக்கு எதிரில் உள்ள தடாகத்தில் குளிக்க சென்றுள்ளனர். தடாகத்தில் தண்ணீரில் இறங்கி அவர்கள் குளித்துக்கொண்டிருந்தபோது சத்தியமூர்த்தி திடீரென்று தண்ணீருக்குள் மூழ்கினார். அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு, அம்பை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தடாகத்தில் இறங்கி தண்ணீருக்குள் மூழ்கிய சத்தியமூர்த்தியை தேடினர். இரவு 7 மணி வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதனால் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியை கைவிட்டனர். பின்னர் நேற்று காலை தீயணைப்பு துறையினர் மீண்டும் சத்தியமூர்த்தியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.