வன்முறை சம்பவங்களை தடுக்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ரெயில் மறியல்
கும்பல் வன்முறையை தடுக்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று மதுரையில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை,
உத்தரபிரதேச மாநிலத்தில் ஜெய்ஸ்ரீராம் என்று சொல்ல வலியுறுத்தி 15 வயது சிறுவன் ஒருவன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் உள்பட வன்முறை சம்பவங்களை கண்டித்தும், அவற்றை தடுக்க வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று மதுரையில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக கட்சியின் மாவட்ட தலைவர் முஜிபுர் ரகுமான் தலைமையில் பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 4 மணிக்கு ஆர்.எம்.எஸ். ரோடு பகுதிக்கு வந்தனர்.
அவர்கள் மத்திய அரசு மற்றும் சங்பரிவார் அமைப்புகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று மதுரை ரெயில்நிலையத்தின் கிழக்கு நுழைவுவாயில் பகுதி வழியாக ரெயில்நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். ஆனால், போலீசார் தடுப்புகள் அமைத்து அவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர். இதனால், அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதற்கிடையே, அந்த கட்சியை சேர்ந்த சிலர் செங்கோட்டையில் இருந்து மதுரை வரும் பாசஞ்சர் ரெயிலில் பயணம் செய்து ரெயில்நிலையத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. அந்த ரெயில் மதுரையில் இருந்து மாலை 5 மணிக்கு செங்கோட்டை புறப்பட தயாராக இருந்தது.
அப்போது, திடீரென அந்த ரெயில் என்ஜின் மீது ஏறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலறிந்ததும், மதுரை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் யேசு ராஜசேகர், ரெயில்வே பாதுகாப்புப்படை இன்ஸ்பெக்டர் முகேஷ் குமார் மற்றும் போலீசார் பிளாட்பாரத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும் படி வலியுறுத்தினர்.
மேலும், இது குறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட அனைவரையும் மாநகர போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர். இந்த சம்பவத்தால் மதுரை ரெயில்நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.