ஈரோடு ஆனைக்கல்பாளையத்தில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு; மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தனர்
ஈரோடு ஆனைக்கல்பாளையத்தில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.
ஈரோடு,
மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட கலெக் டர் சி.கதிரவன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
ஈரோடு அருகே உள்ள ஆனைக்கல்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-
ஆனைக்கல்பாளையம் பகுதியில் சுமார் 800 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஆனைக்கல்பாளையம் பஸ் நிறுத்தம் ரிங்ரோடு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எல்.ஐ.சி. காலனி, தாமரை நகர், லிபர்டி அவன்யூ, சபரி கார்டன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆனைக்கல்பாளையம் பஸ் நிறுத்தம் செல்வதற்கு ரிங்ரோடு வழியாகத்தான் செல்ல வேண்டியுள்ளது. எனவே அங்கு புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் செல்வதற்கு மிகவும் சிரமம் ஏற்படும். மேலும், மதுபிரியர்கள் குடித்துவிட்டு சாலையில் நடந்து செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகும். எனவே ரிங்ரோடு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
சத்தியமங்கலம் அருகே உள்ள புளியங்கோம்பை பகுதியை சேர்ந்த விவசாயிகள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:-
கம்பத்தராயன் மலையில் இருந்து வரும் மழை வெள்ளம் ஓடை வழியாக சென்று பவானி ஆற்றில் கலக்கிறது. எனவே அந்த ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்று 40 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். எங்களுடைய கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறை சார்பில் திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி 40 மீட்டர் நீளத்தில், 9 மீட்டர் உயரத்தில் தடுப்பணை கட்டுவதற்கும், 1.7 கிலோ மீட்டர் தூரத்துக்கு இடதுபுற கால்வாயும், 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வலதுபுற கால்வாயும் அமைத்து முறையே 301 ஏக்கர், 128 ஏக்கர் பாசனம் பெறும் வகையிலும் திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 ஆயிரத்து 500 விவசாயிகள் பயன்அடைவார்கள். மேலும், சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். எனவே புளியங்கோம்பை பகுதியில் தடுப்பணை கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மொடக்குறிச்சி அருகே உள்ள வேலம்பாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், “எங்கள் பகுதியில் 30 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் ஆழ்துளை கிணற்று தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வருகிறோம். தற்போது அந்த தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் கடந்த 3 மாதங்களாக குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகிறோம். இதுதொடர்பாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகார் தெரிவித்தபோது, ஆழ்துளை கிணற்று தண்ணீர் கிடைக்கும் வகையில் வழிவகை செய்து கொடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் இதுவரை குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்களது பகுதியில் குடிநீர் கிடைக்க வழிவகை செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்”, என்று கூறப்பட்டு இருந்தது.
நசியனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருப்பதாவது:-
நசியனூர் பேரூராட்சி சந்தையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை எரிக்கும் எந்திரம் வைக்கப்பட்டு உள்ளது. அதன் அருகில் பள்ளிக்கூடம் உள்ளது. அங்கு சுமார் 1,700 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். சந்தையில் குப்பைகளை எரிப்பதால் வெளிவரும் புகையினால் மாணவ- மாணவிகளுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல், இருமல் போன்ற கோளாறு ஏற்படுகிறது. மேலும், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதனால் கடந்த 31-ந் தேதி பொதுமக்கள் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, பேரூராட்சி செயல் அதிகாரி, தற்காலிகமாக குப்பைகளை எரிப்பதை நிறுத்தி கொள்வதாக உறுதி அளித்தார். பொதுமக்களின் நலன் கருதி குப்பைகள் எரிக் கும் எந்திரத்தை ஊருக்கு ஒதுக் குபுறமாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு அருகே உள்ள பெருமாள்மலையை சேர்ந்த வாலிபர்கள் சிலர் கொடுத்த கோரிக்கை மனுவில், “எங்களது பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் சுமார் 300 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்கள் விளையாடுவதற்கு உரிய மைதானம் இல்லை. தற்போது மாணவ-மாணவிகள் பயன்படுத்தும் விளையாட்டு திடலையும் சிலர் ஆக்கிரமித்து வருகிறார்கள். எனவே மாணவ- மாணவிகளுக்கு உரிய விளையாட்டு திடல் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று கூறிஇருந்தனர்.
கொடுமுடி அருகே உள்ள ஆவுடையார்பாறை ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:-
ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் எங்களுக்கு 31 வீட்டுமனைகள் கடந்த 2005-ம் ஆண்டு வழங்கப்பட்டது. இதில் 8 குடும்பத்தினர் பசுமை வீடுகளை கட்டி உள்ளனர். மற்றவர்கள் குடிசை வீடுகள் அமைத்து தங்கி இருந்தனர். சூறாவளி காற்று வீசியதில் குடிசைகள் சேதமடைந்ததால் அருகில் உள்ள வாடகை வீடுகளில் வசித்து வந்தோம்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிகாரிகள் ஆய்வு செய்து, எங்களை அதே பகுதியில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தினார் கள். அதன்பின்னர் அங்கு சென்று குடிசை அமைத்து வாழ்ந்து வருகிறோம். இந்தநிலையில் எங்களுக்கு வழங்கப்பட்ட 22 வீட்டுமனைகள் காலியாக உள்ளதாகவும், விலையில்லா வீட்டுமனை வழங்குவதற்கு பிறப்பிக்கப்படும் உத்தரவின்படி நடக்கவில்லை என்றும், ஈரோடு தாசில்தார் முன்பு வருகிற 7-ந் தேதி (நாளை) ஆஜராக வேண்டும் என்றும் நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது. எங்களுக்காக வழங்கப்பட்ட வீட்டுமனையில் நாங்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வருகிறோம். எனவே எங்களுடைய பட்டாக்களை ரத்து செய்யாமல் அதே பகுதியில் தொடர்ந்து வசிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், நாங்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர், மின்சாரம், சாலை, சாக் கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 231 மனுக்களை கொடுத்தனர். மேலும், கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களின் மீது உடனுக்குடன் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நலவாரியங்களில் பதிவுபெற்ற 10 தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 பெறுவதற்கான உத்தரவுகள், 3 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு விபத்து மரண நிவாரண நிதி உதவியாக தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.3 லட்சம் பெறுவதற்கான உத்தரவுகள், 4 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு இயற்கை மரண நிவாரண நிதி உதவியாக தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் பெறுவதற்கான உத்தரவுகள், 6 தொழிலாளர்களுக்கு தலா ரூ.17 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் பெறுவதற்கான உத்தரவுகள் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தினேஷ் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.