வேதாரண்யம் பகுதியில் சூறைக்காற்று: மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை
வேதாரண்யம் பகுதியில் சூறைக்காற்று வீசியதால் மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், பெரியகுத்்தகை, வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது.
நேற்றும் சூறைக்காற்று வீசியதால் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்காக மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதை தொடர்ந்து தங்களது படகுகளை பாதுகாப்பாக கரையில் மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.
தொடர்ந்து 3-வது நாளாக மீன்வர்கள் மீன்பிடிக்க செல்லாததால் வேதாரண்யம் பகுதியில் மீன்கள் வரத்து இல்லை. மக்கள் கூட்டம் இன்றி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. சூறைக்காற்று ஓய்ந்து மீன்பிடிக்க செல்ல இன்றும் 3 நாட்களாகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.