வண்டலூரில் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

வண்டலூரில் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.

Update: 2019-08-04 23:05 GMT
வண்டலூர்,

சென்னை பெரம்பூர் செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 23). இவரது நண்பர் நரேஷ்குமார் (25), இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

வண்டலூர் மேம்பாலத்தில் செல்லும் போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி சாலை தடுப்புச்சுவரில் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த இருவரும் படுகாயம் அடைந்தனர். இதில் மனோஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

நரேஷ்குமார் குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்