பேரிடர் மேலாண்மை துறை சார்பில் காயல்பட்டினத்தில் புயல், வெள்ள பாதுகாப்பு ஒத்திகை கலெக்டர் சந்தீப்நந்தூரி ஆய்வு

காயல்பட்டினத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் புயல் மற்றும் வெள்ள பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி ஆய்வு செய்தார்.

Update: 2019-08-04 22:30 GMT
ஆறுமுகநேரி, 

காயல்பட்டினத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் புயல் மற்றும் வெள்ள பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி ஆய்வு செய்தார்.

பேரிடர் மேலாண்மை

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் புயல் மற்றும் வெள்ளம் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அந்த பகுதி மக்களுக்கு முன்கூட்டியே தகவல்கள் தெரிவிக்கப்பட்டு பயப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

முதலில் காயல்பட்டினம் மாட்டுக்குளம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிந்து அதில் 3 பேர் காயம் அடைந்தது போலவும் அவர்களை மீட்பது போலவும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. அதே போல் அக்பர்ஷா காலனியில் உள்ள ஒருவர் வீட்டின் முன்பு பெரிய மரம் சாய்ந்தது போல் அதனை அப்புறப்படும் பணி நடந்தது. மேலும் வெள்ள நீரில் தத்தளித்த 30 பேரை பேரிடர் மீட்பு படையினர் படகு மூலம் காப்பாற்றுவது போன்ற ஒத் திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கலெக்டர் ஆய்வு

இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி பேரிடர் மீட்பு குழுவினர் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு உபகரணங்களை ஆய்வு செய்தார். பின்னர் அவர் காயல்பட்டினம் கொம்புதுறை பகுதியில் நிருபர்களிடம் கூறியதாவது;-

புயல், வெள்ளம் வந்தால் அதில் இருந்து மக்களை எப்படி காப்பாற்றுவது, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், அவர்களுக்கு தேவையான முதல்கட்ட சிகிச்சை முறைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் 9 துறை சார்ந்த அதிகாரிகள் மக்களுடன் செயல்பட்டனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் கீதாராணி, திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத், மீன்வளத்துறை உதவி இயக்குனர் பாலசரசுவதி, தீயணைப்பு அதிகாரி நட்டார் ஆனந்தி, காயல்பட்டினம் நகரசபை ஆணையர் புஷ்பலதா மற் றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்