மில் அதிபர் வீட்டில் ரூ.2 கோடி தங்கம், வைர நகைகள் திருட்டு: கைதான வடமாநில வாலிபர் கோவை சிறையில் அடைப்பு
மில் அதிபர் வீட்டில் ரூ.2கோடி தங்கம், வைர நகைகளை திருடியவழக்கில் கைதான வடமாநில வாலிபர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை,
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்தவர் சைலேஸ் எத்திராஜ் (வயது 52). ஸ்பின்னிங் மில் அதிபர். இவருடைய 84 வயதானதாயாரை கவனிப்பதற்காக ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தை சேர்ந்த பிகாஸ் என்கிற விகாஸ் குமார் ராய் (20) என்பவரை வேலைக்கு வைத்து இருந்தார்.
இந்தநிலையில் மில் அதிபர் கடந்த 28-ந்தேதி தனது மனைவியுடன் பெங்களூரு சென்றார். கடந்த 30-ந்தேதி அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டில் வைத்திருந்த தங்கம், வைர நகைகள் மற்றும்ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.2 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் வீட்டில் இருந்த விகாஸ் குமார் ராயும் மாயமாகி இருந்தார். இதனால் அவற்றை விகாஸ் குமார்ராய் திருடி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.
இதுகுறித்து மில் அதிபர்சைலேஸ் எத்திராஜ் கொடுத்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரித்தனர். அதில் தங்கம், வைர நகைகள் மற்றும் பணத்தை விகாஸ் குமார் ராய் திருடிக்கொண்டு ரெயில் மூலம் தப்பி சென்றது தெரிய வந்தது. உடனே அவரை ரெயில்வே பாதுகாப்பு படையின் உதவியுடன் தனிப்படை போலீசார் பான்குரா ரெயில் நிலையத்தில் மடக்கிப்பிடித்தனர். அப்போது அவர் தப்ப முயன்றார். ஆனாலும்அவரை போலீசார்கைது செய்தனர்.
அவரிடம் இருந்து தங்கம், வைர நகைகள்,ரொக்கபணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர்அவரை பாட்னா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர், நேற்று முன்தினம்இரவு கோவை அழைத்து வரப்பட்டு 4-வதுகுற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.