மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல் கோவை வாலிபர்கள் 2 பேர் பரிதாப சாவு ஒருவர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் கோவை வாலிபர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த வாலிபருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்துகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-08-03 22:15 GMT
போத்தனூர்,

கோவை வெள்ளலூர் ஹவுசிங்யூனிட்டை சேர்ந்தவர்சந்திரன். இவருடைய மகன் ஹரிகரன் (வயது 23), பிளம்பர். அதே பகுதியை சேர்ந்தவர்ஆசிக் (24), பெயிண்டர். இவர்களது நண்பர் ஹர்சத்(25). நேற்றுமாலை இவர்கள் 3 பேரும்ஹர்சத்தின் மோட்டார் சைக்கிளில் வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்தவழியாக சென்ற தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள்மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர்கள் 3 பேரையும் அப்பகுதிமக்கள்மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஹரிகரன் மற்றும்ஆசிக் பரிதாபமாக இறந்தனர்.

இதைத்தொடர்ந்து ஹர்சத் மேல்சிகிச்சைக்காக போத்தனூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். முன்னதாக விபத்து ஏற்பட்ட இடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

இந்த சம்பவம்குறித்து கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தப்பி ஓடிய பஸ் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்