மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா கூறினார்.
பெரம்பலூர்,
மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.ஆயிரமும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.3 ஆயிரமும், 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ரூ.4 ஆயிரமும், இளங்கலை பட்டப்படிப்பிற்கு ரூ.6 ஆயிரமும், முதுகலை பட்டப்படிப்பு, தொழில்நுட்பகல்வி, மருத்துவம் மற்றும் பொறியியல் தொழில் கல்விக்கு ரூ.7 ஆயிரம் ஓராண்டிற்கு கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. மேலும் பார்வையற்ற மாணவ- மாணவிகளுக்கான வாசிப்பாளர் உதவித்தொகையாக 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ரூ.3 ஆயிரமும், இளங்கலை பட்டப்படிப்பிற்கு ரூ.5 ஆயிரமும், முதுகலை பட்டப்படிப்பு மற்றும் தொழில்நுட்பகல்விக்கு ரூ.6 ஆயிரம் ஆண்டொன்றுக்கு வழங்கப்படுகிறது. 2019-20-ம் நிதியாண்டு திட்டத்தின் கீழ் பயனடைய பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி, கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகள் கடந்த கல்வி ஆண்டின் இறுதி தேர்வில் குறைந்த பட்சமாக 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
31-ந் தேதிக்குள்
எனவே மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் அவர்கள் பிற துறைகளில் கல்வி உதவித்தொகை ஏதும் பெறவில்லை என்று தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வரின் சான்றிதழ், கடந்த ஆண்டு மதிப்பெண் சான்று நகல் (9-ம் வகுப்புக்கு மேல்) அளிக்கப்படவேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.