பொன்னேரி அருகே கோவில் பெயரில் ரூ.1 கோடி முதலீடு; வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அறநிலையத்துறையினர் ஆய்வு
பொன்னேரி அருகே கோவில் பெயரில் ரூ.1¾ கோடி முதலீடு செய்திருப்பது குறித்து வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர். இதையடுத்து இந்து அறநிலையத்துறையினர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
பொன்னேரி,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் அடங்கிய ஆண்டார்குப்பம் கிராமத்தில் புகழ் பெற்ற பாலசுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக 100 ஏக்கர் நிலம் உள்ளது. கோவிலுக்கு ஆண்டு தோறும் ரூ.30 லட்சம் வருமானம் வரும் என்று கூறப்படுகிறது.
இந்த கோவிலில் கீழ் ஆரணி கிராமத்தில் காணியம்மன் கோவில், செங்கரை கிராமத்தில் காட்டுசெல்லியம்மன் கோவில்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த கோவிலில் தற்கால பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியர் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளதாக தமிழக முதல்-அமைச்சர், இந்து அறநிலையத்துறை அமைச்சர், அரசு செயலாளர், இந்து அறநிலையத்துறை ஆணையர் உள்பட பல்வேறு அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது. ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் இந்த கோவிலுக்கு புதியதாக சீனிவாசன் என்பவர் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டார்.
இவரது நிர்வாகத்தின் கீழ் ஞாயிறு புஷ்பதீஸ்வரர் கோவில், ஆரணி காணியம்மன் கோவில், செங்கரை காட்டுசெல்லியம்மன் கோவில் செயல்படுகிறது. பக்தர்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் பெரும்பாலும் கோவிலில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் மீது இருந்தது. பலவகை ரசீதுகள், குத்தகை, வாடகை ரசீதுகள், அபிஷேகம், அர்ச்சனை டிக்கெட்டுகள் போன்றவற்றில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் ஆரணி காணியம்மன் கோவிலுக்கு சேரவேண்டிய பசலி தொகை ரூ.27 ஆயிரத்து 639 போலி கையொப்பம் மூலம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஆரணி போலீசில் புகார் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில் முறைகேடுகள், ஊழல்கள் குறித்து கண்காணிக்கும் செயல் அலுவலரை மிரட்டும் வகையில் தற்காலிக ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் ஞாயிறு புஷ்பதீஸ்வரர் கோவிலுக்கு சென்று விட்டு கடந்த மே மாதம் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது மர்ம நபர்களால் வெட்டப்பட்டார். இத்தகைய செயலில் ஈடுபட்டது கோவிலில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து ஆண்டார்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் பாலசுப்பிரமணிய சாமி திருக்கோவிலில் பல்வேறு முறைகேடுகள் ஊழல்கள் நடந்து வருவதாகவும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதை தங்களுக்கு இணைத்து அனுப்பி உள்ளதாகவும் தமிழக முதல்-அமைச்சர், இந்து அறநிலைய துறை அமைச்சர், மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில் பண மதிப்பிழப்பு நேரத்தில் ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியர் கோவில் பெயரில் புதிதாக வங்கி கணக்கு தொடங்கப்பட்டு ரூ.1 கோடியே 74 லட்சத்து 22 ஆயிரத்து 497 வங்கியில் செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான வருவாய் சம்பந்தமான கணக்குகளை 1961 வருமான வரி சட்டம் 144-ன் படி தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இதற்கான பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் இந்து அறநிலைய துறை அதிகாரிகள் பதிலளிக்கவில்லை. இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி திருவள்ளூர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
ஒருபுறம் வருமான வரித்துறை நோட்டீஸ் மறுபுறம் பக்தர்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் வந்தது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலவன் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட உதவி ஆணையர் சுப்பிரமணி, செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் பணியாற்றும் ஊழியர்கள் மீதான புகார்கள், கோவிலில் நடந்த முறைகேடுகள் குறித்தும் கோவிலின் வரவு, செலவுகள் குறித்து நேற்று ஆய்வு செய்தனர்.
தணிக்கையாளர்கள் குழுவினரும் கோவில் கணக்குகளை தணிக்கை செய்து வருகின்றனர். கோவிலில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.