நடுரோட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்; தட்டிக்கேட்ட ஆசிரியருக்கு அடி-உதை
கும்பகோணம் அருகே நடுரோட்டில் பிறந்த நாள் கொண்டாடியதை தட்டிக்கேட்ட ஆசிரியரை மாணவர்கள் அடித்து உதைத்தனர். இதில் படுகாயம் அடைந்த ஆசிரியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த ஆண்டலாம்பேட்டை மகாஜனக்குடியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் கல்யாணசுந்தரம்(வயது 35). இவர், கும்பகோணம் நால்ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 4 வருடங்களாக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். 7-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை உள்ள மாணவர்களுக்கு உயிரியல் பாடம் நடத்தி வருகிறார்.
மேலும் இவர் பள்ளியில், மாணவர்கள் ஒழுங்கு நடவடிக்கை கண்காணிப்பு குழுவிலும் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலையில் இவர் பள்ளி முடிந்ததும் வழக்கம்போல் வீட்டுக்கு செல்வதற்காக பள்ளியில் இருந்து வெளியில் செல்ல தயாராக இருந்தார்.
அப்போது பள்ளியின் முன்பு நடுரோட்டில் பிளஸ்-2 மாணவர் ஒருவர், தனது பிறந்த நாளை தனது நண்பர்கள் 10 பேருடன் கேக் வெட்டி கொண்டாடினார். இதன் காரணமாக அந்த பகுதியில் கூச்சல் ஏற்பட்டது. சாலையை மறித்து சாலையின் நடுவில் கேக் வெட்டி கொண்டாடியதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த பள்ளியின் தாளாளர் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் ஆகிய இருவரும் ஆசிரியர் கல்யாணசுந்தரம் உள்பட 4 ஆசிரியர்களை அனுப்பி நடுரோட்டில் பிறந்த நாள் கொண்டாடும் மாணவர்களை அங்கிருந்து செல்ல அறிவுறுத்துமாறு உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து அங்கு சென்ற கல்யாணசுந்தரம் உள்பட 4 ஆசிரியர்களும், நடுரோட்டில் சாலையை மறித்து நின்று கொண்டு கூச்சலிட்டபடியும், ஆரவாரம் செய்தபடியும் இருந்த மாணவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறினர்.
இதனால் பிறந்த நாள் கொண்டாடிய மாணவரும், அவரது நண்பர்களும் சேர்ந்து ஆசிரியர் கல்யாணசுந்தரத்தை சரமாரியாக தாக்கினர். மாணவர்களின் தாக்குதலால் ஆசிரியர் கல்யாணசுந்தரம் நிலைகுலைந்தார். ஆசிரியரின் முகம் மற்றும் உடம்பில் பல்வேறு இடங்களில் தாக்கி அவரை கீழே தள்ளி காலால் மிதித்துள்ளனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற ஆசிரியர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இந்த சம்பவம் நடந்தபோது அந்த வழியாக போலீஸ்காரர் ஒருவர் எதேச்சையாக வந்துள்ளார். அவர், நடுரோட்டில் ஆசிரியரை மாணவர்கள் தாக்குவதை பார்த்து அவர்களை விரட்டியடித்தார்.
இந்த தாக்குதலில் முகத்தில் பலத்த காயத்துடன் வலியால் துடித்த ஆசிரியர் கல்யாணசுந்தரத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கும்பகோணம் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் கும்ப கோணம் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடுரோட்டில் ஆசிரியரை மாணவர்கள் தாக்கிய அராஜக சம்பவம் கும்பகோணம் நகரில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படித்து பட்டம் பெற்று பணிக்கு செல்ல வேண்டிய மாணவர்கள் இப்படி பொறுப்பற்ற தன்மையுடன் நடந்து கொண்டதுடன் அதை தட்டிக்கேட்ட ஆசிரியரை தாக்கிய சம்பவத்தை அறிந்த மற்ற மாணவர்களின் பெற்றோர் மிகுந்த வேதனை அடைந்தனர்.