சோற்றில் விஷம் வைத்து பெற்றோரை கொன்றவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு
மனைவியுடன் சேர்த்து வைக்காததால் ஆத்திர மடைந்து தாய்- தந்தைக்கு சோற்றில் விஷம் வைத்து கொலை செய்த வியாபாரிக்கு ராமநாதபுரம் கோர்ட்டில் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே உள்ள வழிமறிச்சான் பகுதியை சேர்ந்தவர் நடராஜன்(வயது60). இவரின் மகன் ராமச்சந்திரன்(38). இவர் தனது மனைவி முத்துலட்சுமி மற்றும் 2 குழந்தைகளுடன் மும்பையில் இட்லி வியாபாரம் செய்து பிழைத்து வந்தார். அங்கு ராமச்சந்திரனுக்கு ஏற்பட்ட குடிப்பழக்கம் காரணமாக கணவன்- மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் அங்கிருந்து மீண்டும் சொந்த ஊருக்கு வந்துவிட்டனர். இங்கும் மனைவியிடம் குடித்துவிட்டு தகராறு செய்ததால் முத்துலட்சுமி கணவனை பிரிந்து சென்றுவிட்டார்.
இதனால் மனம் உடைந்த ராமச்சந்திரன் மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி தந்தை நடராஜன், தாயார் கருப்பாயியிடம் கூறியுள்ளார். ராமச்சந்திரனின் நடவடிக்கை காரணமாக இதற்கு பெற்றோர் மறுத்துள்ளனர். இதனால் மனைவியுடன் சேர்த்து வைக்கவில்லையே என்று பெற்றோர் மீது ராமச்சந்திரன் ஆத்திரமடைந்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1-ந் தேதி இரவு அனைவரும் சாப்பிட்ட பின்னர் பழைய சோற்றில் ராமச்சந்திரன் பூச்சி மருந்தினை கலந்து வைத்துள்ளார். மறுநாள் காலையில் நடராஜனும், கருப்பாயியும் கஞ்சியை பாத்திரத்தில் ஊற்றிக்கொண்டு வயலுக்கு வேலைக்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் கஞ்சியை குடித்தபோது உடலில் விஷம் ஏறி மயக்கமடைந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இருவரும் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து ராமச்சந்திரனின் தம்பி குமார் அளித்த புகாரின் அடிப்படையில் பார்த்திபனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம் தாய்- தந்தையை விஷம் வைத்து கொலை செய்த குற்றத்திற்காக ராமச்சந்திரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ.4 ஆயிரம் அபராதமும் அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கருணாகரன் ஆஜரானார்.