பெண் வெட்டிக்கொலை: சாத்தான்குளம் கோர்ட்டில் கள்ளக்காதலன் சரண்
பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், சாத்தான்குளம் கோர்ட்டில் கள்ளக்காதலன் சரண் அடைந்தார்.
சாத்தான்குளம்,
பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், சாத்தான்குளம் கோர்ட்டில் கள்ளக்காதலன் சரண் அடைந்தார்.
பெண் வெட்டிக்கொலை
தென்திருப்பேரை அருகே உள்ள முதலைமொழி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி மனைவி மல்கியா (வயது 35). இவர் பழையகாயலில் உள்ள தனியார் மீன் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரை கடந்த 30-ந்தேதி இரவில் அதே ஊரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் லாரி டிரைவரான மாணிக்கராஜ் (32) அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மல்கியாவுக்கும், மாணிக்கராஜிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது. கடந்த 2014-ம் ஆண்டு கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மல்கியாவின் கணவர் முத்துசாமியை மாணிக்கராஜிம், மல்கியாவும் சேர்ந்து வெட்டிக்கொலை செய்தனர். பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த மாணிக்கராஜிம், மல்கியாவும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தனர். இதற்கிடையே மல்கியாவுக்கு வேறு நபர்களுடனும் பழக்கம் இருந்ததை அறிந்த மாணிக்கராஜ் அரிவாளால் மல்கியாவை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.
கோர்ட்டில் கள்ளக்காதலன் சரண்
இதையடுத்து போலீஸ் தனிப்படை அமைத்து, தலைமறைவான மாணிக்கராஜை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் மாணிக்கராஜ் நேற்று சாத்தான்குளம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
அவரை 15 நாள் காவலில் வைக்குமாறு நீதிபதி சரவணன் உத்தரவிட்டார். இதையடுத்து மாணிக்கராஜை போலீசார் பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.