தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கத்தினர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2019-08-01 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நேற்று மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு மாணவர் அரவிந்தன் தலைமை தாங்கினார்.

இதில் மருத்துவ மாணவர் சங்க பொறுப்பாளர் சிவபிரியா மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள நெக்ஸ்ட் தேர்வை மருத்துவ மாணவர்களின் மீது திணிப்பது மருத்துவக் கல்வியைச் சீரழிப்பதற்கும், மருத்துவத் துறையின் தரத்தை ஒழிப்பதற்கும் காரணமாக அமைந்து விடும் என்றும், இந்த திட்டத்தை கைவிடக்கோரியும், மருத்துவத்துறையின் கருப்புநாளாகக் கருதி மெழுகுவர்த்தி ஏந்தி மருத்துவ துறைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த போராட்டம் நடந்தது.

உருவபொம்மைக்கு மாலை

இதில், தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வரப்பட்டால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவர் என்பதை உணர்த்தும் விதமாக உருவபொம்மைக்கு மாணவர்கள் மாலை அணிவித்திருந்தனர். 

மேலும் செய்திகள்