ஆடி அமாவாசையையொட்டி பூம்புகார் சங்கமத்துறையில் முன்னோருக்கு தர்ப்பணம் திரளானோர் பங்கேற்பு
ஆடி அமாவாசையையொட்டி பூம்புகார் சங்கமத்துறையில் திரளானோர் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
திருவெண்காடு,
ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாளில் ஆறு, குளம் மற்றும் கடலில் புனிதநீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, கோவில்களில் சாமி தரிசனம் செய்தால் வாழ்க்கையில் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
நாகை மாவட்டம் பூம்புகார், காவிரி ஆறும், கடலும் சங்கமிக்கும் இடம் என்பதால் ஆடி, தை, புரட்டாசி மாத அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பூம்புகார் சங்கமத்துறைக்கு வருகிறார்கள்.
ஆடி அமாவாசை
நேற்று ஆடி அமாவாசை என்பதால் அதிகாலையில் இருந்தே ஏராளமானோர் பூம்புகார் சங்கமத்துறையில் குவிந்தனர். அவர்கள் ஆறு, கடலோடு கலக்கும் பகுதியில் புனிதநீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
இதைத்தொடர்ந்து அங்குள்ள ரத்தினபுரனேஸ்வரி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி ரத்தினபுரனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பெண்கள் கோவிலில் மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
மேலும், ஏராளமான சுமங்கலி பெண்கள் எலுமிச்சை பழம், தேங்காய், வெற்றிலை-பாக்கு, மஞ்சள் உள்ளிட்ட மங்கல பொருட்களை சங்கமத்துறையில் செலுத்தி காவிரி அம்மனை வழிபட்டனர். கடற்கரையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீஸ் பாதுகப்பு போடப்பட்டு இருந்தது.
சுவேதாரண்யேஸ்வரர் கோவில்
திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் திரளானோர் கோவில் வளாகத்தில் உள்ள அக்னி, சூரியன், சந்திரன் ஆகிய 3 தீர்த்த குளங்களில் புனிதநீராடி, அங்குள்ள ருத்ரபாதத்தில் தர்ப்பணம் கொடுத்தனர். அஸ்திர தேவருக்கு 3 குளங்களிலும் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.