வானவில் : விரல் ரேகை பூட்டு
நவீன உலகில் நாம் பயன்படுத்தும் சாதனங்கள் பயனுள்ளதாக இருப்பதோடு கையாள்வதும் எளிதாகவே இருக்கின்றன. அந்த வகையில் வந்துள்ளதுதான் விரல் ரேகை உணர் பூட்டு.
விரல் ரேகை உணர் பூட்டின் மேல் பாகம் அலுமினியம் அலாயினால் ஆனது. இதனால் துருப்பிடிக்கும் வாய்ப்பு இல்லை. பூட்டு பகுதி உறுதியாக இருப்பதற்காக ஸ்டீல் வயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பூட்டு பேட்டரியில் செயல்படக் கூடியது. சார்ஜ் குறைந்தால் சிவப்பு விளக்கு எரிந்து எச்சரிக்கும். சார்ஜ் போட்டுவிட்டால், முழுவதும் சார்ஜ் ஆன பிறகு அணைந்துவிடும். லாக்கர், சூட்கேஸ் கோல்ப் பை, கைப் பை, பள்ளி லாக்கர்கள், பர்னிச்சர், வார்ட்ரோப் உள்ளிட்ட அனைத்திலும் பயன்படுத்தலாம். இந்த பூட்டில் 10 பேரது விரல் ரேகை வரை பதிவு செய்யலாம். இதனால் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரது கை ரேகையையும் பதிவு செய்யலாம். 10 பேரில் யார் வந்து கை ரேகையை வைத்தாலும் பூட்டு திறக்கும். இதன் விலை சுமார் ரூ.2,500.