வானவில் : சுத்தமான குடிநீருக்கு...
இன்றைய உலகில் அனைத்து இடங்களிலும் தண்ணீர்தான் பிரச்சினை.;
சில இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு. பல இடங்களில் சுகாதாரமான தண்ணீருக்கு தட்டுப்பாடு. சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டிலில் வைத்து பருகுவது சரியல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக வந்துள்ளது ‘பில்அப்’. இது வாட்டர் பாட்டில்களுக்குத் தீர்வாகும். சுத்தமான தண்ணீரின் தன்மை கெடாமல் இது பாதுகாக்கும். இதை எடுத்துச் செல்வது எளிது.
இதனால் பயணங்களின்போது இதை எடுத்துச் செல்லலாம். இதன் உட்பகுதி ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் ஆனது. இதனால் பிளாஸ்டிக் கலப்பு கிடையாது. பில்அப் 70 மற்றும் பில்அப் 110 என்ற இரண்டு அளவுகளில் இது கிடைக்கிறது. இதில் பில்அப் 70 மாடலின் விலை ரூ.6,829 ஆகும். உடலின் தண்ணீர் சத்து குறைவதை சுகாதாரமான தண்ணீரை பருகுவதன் மூலமே தடுக்க இயலும்.
இதனால் பணியிடங்களிலும், வீடுகளிலும் இதை பயன்படுத்தலாம். அதிக இடத்தை அடைத்துக் கொள்ளாத வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் குளிர்ந்த நீரை நிரப்பினால் அது 24 மணி நேரம் வரை குளிர்ச்சியாக இருக்கும்.
இதன் மேல்பகுதி தண்ணீர் புகா வகையில் அழகிய தோல் உறையைக் கொண்டதாக பார்ப்பதற்கே அழகாக உள்ளது. 4.5 அங்குல விட்டம் உள்ளதால் இதில் நீரை நிரப்புவதும் எளிது, சுத்தம் செய்வதும் எளிது.
இதன் அடிப்பகுதி ஸ்திரமாக உள்ளதால் இதை எந்த இடத்திலும் வைக்க முடியும். தண்ணீரை குடிப்பதற்கு வசதியாக செராமிக்கால் ஆன குவளையும் இத்துடன் அளிக்கப்படுகிறது. நீர் வரும் குழாய் பாதை ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் ஆனது. சுத்தமான தண்ணீரை எப்போதும் பருக விரும்புவோரின் தேர்வாக இது நிச்சயம் இருக்கும்.