வானவில் : ஸ்மார்ட்போன் ரேஸர்
அடிக்கடி வெளியூருக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு மிகவும் உபயோகமானது இந்த ஹான்பெய்லி ஸ்மார்ட்போன் ரேஸர்.
ஸ்மார்ட்போனில் உள்ள பேட்டரி மூலமே இது செயல்படும். இதனால் டிரிம்மருக்கு வேறு எதுவும் தேவைப்படாது.
தினசரி ஷேவிங் செய்யும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ளது. இது பல்வேறு அழகிய வண்ணங்களில் கோல்டு, கன் மெட்டல், சில்வர் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. 5.5 செ.மீ நீளமுடைய இந்த ரேஸர் ஆண்களின் அழகை மேம்படுத்த நிச்சயம் உதவும். இதன் விலை ரூ.750.