மாற்றுப்பணிக்காக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை அந்தந்த ஒன்றியங்களில் அமர்த்த வேண்டும் - அரசுக்கு கோரிக்கை
மாற்றுப்பணிக்காக அனுப்பப்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை அந்தந்த ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் பணியில் அமர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்கம்புணரி,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அன்பரசு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கணபதிபட்டி கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் மாற்றுப்பணிக்காக சென்ற காரைக்குடி மானகிரி பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஜான் பிரிட்டோ வாகன விபத்தில் நேற்று பலியானார். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்ளப்படுகிறது. பொதுவாக ஒரு இடத்தில் பணியாற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை மாற்றுப்பணி என்ற முறையில் அந்தந்த ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் மட்டும் பணியில் அமர்த்த வேண்டும்.
அப்போது தான் ஆசிரியர்கள் நல்ல மனநிலையில் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியும். இதை தவிர்த்து 30 மற்றும் 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிகளில் மாற்றுப்பணிக்காக ஆசிரியர்களை அனுப்பினால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு பல்வேறு பிரச்சினைகள் மற்றும் இதேபோல் விபத்துகள் ஏற்பட்டு பெரிய இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.
இனிவரும் காலங்களில் மாற்றுப்பணிக்காக ஆசிரியர்களை அவர்கள் ஏற்கனவே வேலை பார்த்த பள்ளிக்கு சற்று அருகில் உள்ள பகுதியில் செயல்படும் பள்ளிகளில் பணியில் அமர்த்த வேண்டும். அப்போது அந்தந்த பள்ளிகளில் பணிக்கு வரும் ஆசிரியர்கள் புத்துணர்ச்சியோடு பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க முடியும். வரும் காலங்களில் ஆசிரியர்களின் சிரமங்களை உணர்ந்து தமிழக கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.