அம்பை சங்கரலிங்க சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

அம்பை சங்கரலிங்க சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா வருகிற 3-ந் தேதி(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.;

Update: 2019-07-30 21:30 GMT
அம்பை, 

அம்பை சங்கரலிங்க சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா வருகிற 3-ந் தேதி(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சங்கரலிங்க சுவாமி

நெல்லை மாவட்டம் அம்பை சங்கரலிங்க சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா வருகிற 3-ந் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. அன்று மாலை 6.30 மணிக்கு ஸ்ரீபெலிநாதர் வீதிஉலா, இரவு 7.30 மணிக்கு அம்பாள் வீதிஉலா நடக்கிறது. திருவிழா 13-ந் தேதி வரை நடக்கிறது.

விழா நாட்களில் 4-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பல்வேறு வாகனங்களில் தினமும் காலை 8 மணிக்கு அம்பாள் திருவீதி உலா, 10 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனையும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இசையரங்கமும் நடக்கிறது.

12-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது.

தபசுக்காட்சி

விழாவின் சிகர நிகழ்ச்சியாக 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆடித்தபசு அன்று அதிகாலை 4.30 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. காலை 6.30 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் அம்பாள் தபசுக்கு எழுந்தருளலும், மாலையில் தபசுக்காட்சியும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சங்கர நாராயணராகவும், 6.30 மணிக்கு சங்கரலிங்க சுவாமியாகவும் கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. பின்னர் இரவு 9 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. ஆடித்தபசு அன்று காலை 9 மணி முதல் திருக்கோவில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

தெப்பத்திருவிழா

14-ந் தேதி இரவு 7.30 மணிக்கு சங்கரலிங்க சுவாமி தெப்பத்திருவிழாவும், 15-ந் தேதி இரவு 7.30 மணிக்கு அகஸ்தீஸ்வரர் சுவாமி தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.

மேலும் செய்திகள்