கோபி அருகே தகராறு: கொதிக்கும் வெந்நீரை ஊற்றியதால் 2 பெண்களின் உடல் வெந்தது, தலைமறைவான மற்றொரு பெண்ணுக்கு வலைவீச்சு
கோபி அருகே நடந்த தகராறில் கொதிக்கும் வெந்நீரை 2 பெண்கள் மீது ஊற்றிய மற்றொரு பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
கடத்தூர்,
கோபி அருகே உள்ள சில்லாமடைபுதூரை சேர்ந்தவர் தம்பி. இவருடைய மனைவி மங்கம்மாள் (வயது 44). இவர்கள் 2 பேரும் கூலித்தொழிலாளர்கள். கணவன், மனைவி இருவரும் அருகே உள்ள காட்டுபகுதியில் கடந்த 27-ந் தேதி இரவு நடந்து சென்றுகொண்டு இருந்தார்கள். அப்போது எதிரே மங்கம்மாளின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பூங்கொடி (35) என்பவர் கையில் டார்ச் லைட்டுடன் வந்துகொண்டு இருந்தார்.
அப்போது லைட்டின் ஒளி தம்பியின் மீது பட்டது. இதனால் மங்கம்மாள் கோபப்பட்டு ஏன் என் கணவர் மீது டார்ச் லைட் அடிக்கிறாய்? என்றார். உடனே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வீட்டுக்கு சென்றுவிட்டார்கள்.
வீட்டுக்கு சென்ற பிறகும் ஆத்திரம் தாங்காமல் மங்கம்மாள் பூங்கொடியை திட்டிக்கொண்டே இருந்துள்ளார். இதனால் நியாயம் கேட்பதற்காக அதே பகுதியில் வசிக்கும் ராணி (40) என்பவருடன் பூங்கொடி நேற்று முன்தினம் மங்கம்மாளின் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் விறகு அடுப்பில் உலை வெந்துகொண்டு இருந்தது. வீட்டுக்குள் சென்ற பூங்கொடியும், ராணியும் ஏன் விடாமல் திட்டிக்கொண்டே இருக்கிறாய்? என்று கேட்டனர். அவர்களை பார்த்ததும், மேலும் ஆத்திரமடைந்த மங்கம்மாள் கொதித்துக் கொண்டு இருந்த வெந்நீரை எடுத்து பூங்கொடி மற்றும் ராணி மீது ஊற்றினார். இதில் இருவரும் உடல் வெந்து அலறினார்கள்.
சத்தம் கேட்டு ஓடிய அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அங்கு இருவருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மங்கம்மாளை வலைவீசி தேடி வருகிறார்கள்.