பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2019-07-30 22:30 GMT
திருவள்ளூர்,

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, வேலைவாய்ப்பு, கடனுதவி, ரேஷன்கார்டு, வீட்டுமனைப்பட்டா, கணவனால் கைவிடப்பட்டோருக்கு உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 328 கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் கலெக்டர் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2016-ம் ஆண்டு அதிக அளவில் கொடிநாள் நிதி வசூல் செய்த தாசில்தார்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் இதர துறைகளை சார்ந்த அலுவலர்களை பாராட்டி தமிழக கவர்னர் மற்றும் கவர்னரின் தலைமை செயலாளர் கையொப்பமிட்ட பாராட்டு சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ராஜகோபால், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பார்வதி, மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலர் அமிருன்னிசா மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த திரளான அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்