பாளையங்கோட்டையில், டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டையில் டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒரு மாவட்டத்தின் டாஸ்மாக் மேலாளர் மற்றொரு மாவட்டத்துக்கு சென்று ஆய்வு செய்வதை நிறுத்த வேண்டும். மாவட்டங்களில் எழுதப்படாத சட்டமாக பகுதி மேற்பார்வையாளர் என்ற பெயரில் தரகர்களை வைத்துக் கொண்டு பணியாளர்கள் மத்தியில் மாதாந்திர கையூட்டு, இடமாறுதலில் சட்டத்துக்கு புறம்பாக நடைபெறும் கொள்ளைகளை தடுத்து நிறுத்த வேண்டும். குறிப்பிட்ட மதுக்கடைகளை மீண்டும், மீண்டும் ஆய்வு செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு நெல்லை மாவட்ட தலைவர் ராமர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பெர்டினாண்டோ, மாவட்ட இணை செயலாளர் முத்துராஜ், துணைத்தலைவர் சின்னத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர்கள் காமராஜ், மரகதலிங்கம், மாவட்ட இணை செயலாளர்கள் ஷா, பேச்சிமுத்து ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் மாவட்ட பொருளாளர் சண்முகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.