கிராம கோவில் பூசாரிகள் ஆர்ப்பாட்டம்

கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில், புதுக்கோட்டை திலகர் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2019-07-29 22:30 GMT
புதுக்கோட்டை,

கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில், புதுக்கோட்டை திலகர் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அமைப்பாளர் பால்ராஜ் தலைமை தாங்கினார். கந்தர்வகோட்டை ஒன்றிய அமைப்பாளர் கண்ணன், விராலிமலை ஒன்றிய அமைப்பாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கப்படும் என மறைந்த ஜெயலலிதா கொடுத்த தேர்தல் வாக்குறுதியை தற்போதைய முதல்-அமைச்சர் உடனடியாக நிறைவேற்றி, பூசாரிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, புதுக்கோட்டை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்திற்கு சென்று, கண்காணிப்பாளர் பாரதியிடம் கொடுத்தனர். அப்போது அலுவலர்களுக்கும், கோவில் பூசாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்