செங்கல்பட்டு அருகே ஆஸ்பத்திரிக்கு சென்ற கூலித்தொழிலாளி சாவு எம்.எல்.ஏ. வீட்டை உறவினர்கள் முற்றுகை
செங்கல்பட்டு அருகே அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற கூலித்தொழிலாளி இறந்தார். டாக்டர்கள் இல்லாத காரணத்தால் அவர் இறந்ததாக கூறி எம்.எல்.ஏ. வீட்டை முற்றுகையிட்டதால பரபரப்பு ஏற்பட்டது.
உத்திரமேரூர்,
செங்கல்பட்டு அடுத்துள்ள சாலவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் முகமது ரியாஸ். இவரது மகன் முஸ்தபா (வயது 34). கூலிவேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை திடீரென முஸ்தபாவுக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள சாலவாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு டாக்டர்கள் இல்லாத காரணத்தால் முஸ்தபாவுக்கு மேலும் உடல் நிலை மோசமானதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முஸ்தபா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த முஸ்தபாவின் உறவினர்கள், அரசு மருத்துவமனையை முறையாக மேம்படுத்தவில்லை என்று கூறி சாலவாக்கத்தில் உள்ள உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. சுந்தரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த சாலவாக்கம் போலீசார் விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை.
பின்னர் அங்கு வந்த எம்.எல்.ஏ. சுந்தர் அரசு மருத்துவமனையை விரைவில் தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.