குளம் ஆக்கிரமிப்பை எதிர்த்த தந்தை-மகன் படுகொலை மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
குளம் ஆக்கிரமிப்பை எதிர்த்த தந்தை-மகனை படுகொலை செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர்,
திருச்சி மாவட்டம், இனாம்புலியூரை சேர்ந்தவர் வீரமலை (வயது 60). விவசாயி. இவருடைய மகன் நல்லதம்பி (42). இவர்களுக்கு கரூர் மாவட்டம் முதலைப்பட்டியில் விவசாய நிலம் உள்ளது. இதில் மல்லிகை, ரோஜா மலர்ச்செடிகளை பயிரிட்டுள்ளனர். இதனை கவனிப்பதற்கு தற்போது அந்த நிலத்தின் அருகே வீடு கட்டி வீரமலை தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
முதலைப்பட்டியில் ஊராட்சிக்கு சொந்தமான 39 ஏக்கர் சுற்றளவில் உள்ள குளத்தை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்வதாக வீரமலை, வழக்கறிஞர் மூலமாக மதுரை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று தொடந்து உள்ளார். இதையடுத்து கடந்த 25-ந்தேதியன்று அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குளத்தை பார்வையிட்டு அளந்து சென்றனர். இதனால் ஒரு தரப்பினர் வீரமலை, அவர் மகன் நல்லதம்பி மீது ஆத்திரத்தில் இருந்தனர்.
தந்தை - மகன் படுகொலை
இந்நிலையில் நேற்று காலை நல்லதம்பி தனது தோட்டத்தில் பறித்த மல்லிகை பூக்களை திருச்சிக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று விற்றுவிட்டு, ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். நச்சலூர் அருகே வந்தபோது அப்பகுதியில் உள்ள பழைய வானொலி நிலைய அறை உள்ளே மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென நல்லதம்பியை வழிமறித்து அரிவாள்களால் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே நல்லதம்பி இறந்தார்.
பின்னர் ஆத்திரம் தீராத மர்ம நபர்கள் வீரமலை வசித்து வரும் தோட்டத்து வீட்டிற்கு சென்றனர். அப்போது தனது பேரனை பள்ளிக்கு அனுப்பி வைப்பதற்காக வீரமலை தனது வீட்டின் அருகே காத்திருந்தார். அங்கு வந்த மர்ம நபர்கள் வீரமலையையும் அரிவாளால் வெட்டினர். இதில் அவரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவர் இறந்ததை உறுதி செய்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
வலைவீச்சு
இந்த படுகொலை சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த படுகொலை சம்பந்தமாக போலீசாரின் முதல் கட்டவிசாரணையில் குளம் ஆக்கிரமிப்பு பிரச்சினையில் ஆத்திரம் அடைந்த சில நபர்கள் கூலிப்படையினரை வைத்து தந்தை-மகனை படுகொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.