தேனாம்பேட்டையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தேனாம்பேட்டையில், போலீஸ் விசாரணைக்கு பயந்து பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;

Update: 2019-07-29 23:15 GMT
சென்னை,

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் கந்தன். ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி பார்வதி(வயது 44). நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பார்வதி, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பாண்டிபஜார் போலீசார், தூக்கில் தொங்கிய பார்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது வீட்டில் சோதனை நடத்திய போலீசார், பார்வதி எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றினர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர்.

விசாரணையில், நகை திருட்டு வழக்கு தொடர்பாக பார்வதியின் மகள் கவிதா மற்றும் மருமகனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கவிதா, அந்த நகைகளை தனது தாய் பார்வதியிடம் கொடுத்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து பார்வதியை விசாரணைக்கு வரும்படி போலீசார் அழைத்தனர். இதனால் பயந்துபோன பார்வதி, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்