மார்த்தாண்டத்தில் அணுகுசாலையை விரிவுபடுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
மார்த்தாண்டத்தில் அணுகுசாலையை விரிவுபடுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பெண்கள் உள்பட 78 பேரை போலீசார் கைது செய்தனர்.
குழித்துறை,
மார்த்தாண்டத்தில் பம்மம் முதல் வெட்டுமணி வரை 2½ கி.மீட்டர் தூரத்துக்கு இரும்பு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் பம்மத்திலும், வெட்டுமணியிலும் உள்ள சாலை அகலப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் பஸ்கள் இயக்குவதில் சிரமமாக உள்ளது.
மேலும் மேம்பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள சாலையில் ஒரு வாகனம் செல்லும் போது வேறு யாரும் செல்ல முடியாத அளவுக்கு குறுகலாக உள்ளது. எனவே நடைபாதைகளில் உள்ள அணுகு சாலையை நில ஆர்ஜிதம் செய்து விரிவுபடுத்த வேண்டும், பஸ்களை மேம்பாலத்தின் கீழே உள்ள சாலைகள் வழியாக இயக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்த்தாண்டம் வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மார்த்தாண்டம் பம்மத்தில் மேம்பாலம் தொடங்கும் பகுதியில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மார்த்தாண்டம் வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் அனந்தசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்லசாமி போராட்டத்தை தொடங்கி வைத்தார். மார்த்தாண்டம் வட்டாரக்குழு உறுப்பினர் ஹசன், முன்னாள் நகராட்சி தலைவர் டெல்பின், துணை தலைவர் மோசஸ் சுதிர், முன்னாள் கவுன்சிலர் சுனில் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து மறியலில் ஈடுபட்டதாக 8 பெண்கள் உள்பட 78 பேரை தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ், மார்த்தாண்டம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சிவசங்கர் கைது செய்தனர். பின்னர் கைதான அனைவரையும் அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த மறியல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் முடியும் வரை பம்மம் பகுதியில் சுமார் 50 கடைகள் மூடப்பட்டிருந்தன.