ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் (எஸ்.பி.ஐ.) சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

Update: 2019-07-29 10:36 GMT
முன்னணி பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் (எஸ்.பி.ஐ.) சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 76 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதில் டெபுடி ஜெனரல் மேனேஜர் (கேபிட்டல் பிளானிங்) பணிக்கு 1 இடமும், கிரெடிட் அனலிஸ்ட் (ஸ்டக்சரிங்) பணிக்கு 25 இடங்கள், கிரெடிட் அனலிஸ்ட் (கிரேடு 2,3) பணியிடங்களுக்கு 50 இடங்களும் உள்ளன.

அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு பணியிடங்கள் உள்ளன. சி.ஏ., எம்.பி.ஏ., முதுநிலை டிப்ளமோ மேனேஜ்மென்ட் படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித் தகுதி, வயது வரம்பு விவரம், பணி அனுபவ விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். வருகிற ஆகஸ்டு 12-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.sbi.co.in/ என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.

மேலும் செய்திகள்