இயற்கை எரிவாயு நிறுவனத்தில் பணிகள்

இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் சுருக்கமாக ஓ.என்.ஜி.சி. (ONGC) என அழைக்கப்படுகிறது.

Update: 2019-07-29 10:28 GMT
மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஓ.என்.ஜி.சி. (ONGC) நிறுவனத்தில் தற்போது பல்வேறு அலுவலக பணியிடங்களுக்கு அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.

அசிஸ்டன்ட் எச்.ஆர். 125 பேர், செக்ரெட்டேரியல் அசிஸ்டன்ட் பணிக்கு 46 பேர் உள்பட மொத்தம் 214 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அக்கவுண்டன்ட், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், லேப் அசிஸ்டன்ட், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், எலக்ட்ரீசியன் போன்ற பணிகளுக்கும் குறிப்பிட்ட இடங்கள் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 5-8-2019-ந் தேதியில் 18 வயது நிரம்பியவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித் தகுதி:

வணிகவியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் அக்கவுண்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பி.ஏ., பி.பி.ஏ. படித்தவர்கள் அசிஸ்டன்ட் எச்.ஆர். பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு ஏராளமான பணிகள் உள்ளன. லேப் அசிஸ்டன்ட் ஐ.டி.ஐ படித்தவர்கள் இது தொடர்பான பி.எஸ்சி. அறிவியல் படிப்பு படித்தவர்கள் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். முன்னதாக http://www.apprenticeship.gov.in என்ற இணையதளம் சென்று பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். கல்வித்தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிப் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய முகவரி மற்றும் இது பற்றிய விவரங்களை www.ongcindia.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பங்கள் சென்றடைய கடைசிநாள் ஆகஸ்ட் 5-ந்தேதியாகும்.

மேலும் செய்திகள்