களியக்காவிளை அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

களியக்காவிளை அருகே கேரள பகுதியான இஞ்சிவிளையில் இரண்டு வாலிபர்கள் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து பாறசாலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.;

Update:2019-07-29 04:15 IST
களியக்காவிளை,

களியக்காவிளை அருகே கேரள பகுதியான இஞ்சிவிளையில் இரண்டு வாலிபர்கள் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து பாறசாலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வாலிபர்களிடம் இருந்த பையை சோதனை செய்த போது, அதில் 2 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், அவர்கள் கொல்லம் மாவட்டம் மையகாடு பகுதியை சேர்ந்த சுதிஷ் (வயது 23), அல்தாப் (19) என்பதும், மதுரையில் இருந்து ரெயிலில் கஞ்சா கடத்தி வந்து, களியக்காவிளை, பாறசாலை பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்