ஸ்கூட்டியில் இருந்து தவறி விழுந்தார் லாரி சக்கரத்தில் சிக்கி ஆசிரியை பலி கோரேகாவில் பரிதாபம்
கோரேகாவில் ஸ்கூட்டியில் இருந்து தவறி விழுந்த ஆசிரியை லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மும்பை,
மும்பை மலாடில் உள்ள ஸ்ரேயாஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சானா கான்(வயது35). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வந்தார். சம்பவத்தன்று மாலை கலினா சென்றுவிட்டு ஸ்கூட்டியில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
கோரேகாவ் பகுதியில் உள்ள ஒரு சாலையில் வந்த போது, திடீரென அவரது ஸ்கூட்டி சாலையில் சறுக்கியது. இதில் நிலைதடுமாறி ஆசிரியை சானா கான் தவறி சாலையில் விழுந்தார்.
அப்போது, பின்னால் வேகமாக வந்த லாரி துரதிருஷ்டவசமாக அவர் மீது மோதியது. இதில், லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் ஆசிரியை சானா கான் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த வன்ராய் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.