அனைத்து இணை இயக்குனர்களுக்கும் நேர்முக உதவியாளர் பணியிடம் பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் கூட்டத்தில் வலியுறுத்தல்

அனைத்து இணை இயக்குனர்களுக்கும் நேர்முக உதவியாளர் பணியிடம் வழங்கப்பட வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2019-07-28 22:15 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் பேரவை கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயமுகுந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் விஜயகுமார், தீபா முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாவட்ட ஆலோசகர் பாலமுருகன், தலைமை நிலைய செயலாளர் ஞானசங்கரன், அமைப்பு செயலாளர் பாபு, பிரசார செயலாளர் மாரியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன் சங்க கோரிக்கைகளை விளக்கி பேசினார். இணை செயலாளர் சரவணன் விளக்கவுரையாற்றினார். பிரசார செயலாளர் சரவணசாமி சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் இளநிலை உதவியாளர் பதவி உயர்வு கல்வி மாவட்ட அளவில் அலகில் அரசு வழங்கிட வேண்டும். ஏற்கனவே உள்ள நடைமுறை விதிகளின்படி ஆய்வக உதவியாளர் பதவியில் இருந்து இளநிலை உதவியாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்த இளநிலை உதவியாளர், உதவியாளர் நேரடி நியமனத்திற்கு ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும்.

நீதிமன்ற தீர்ப்பின்படி

அலுவலக பணியாளர்களுக்கு 2 சதவீதம் ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும். கல்வி மாவட்ட அளவில் அலுவலக பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும். ஆசிரியர், அலுவலக பணியாளர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும். நீதிமன்ற தீர்ப்பின்படி அமைச்சு பணியாளர்களுக்கு இணை இயக்குனர், துணை இயக்குனர் பணியிடம் வழங்க வேண்டும். மாவட்ட தோறும் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு சட்ட அலுவலர் பணியிட வழங்கப்பட வேண்டும். 25 புதிய மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் பணியிடம் வழங்கப்பட வேண்டும்.

அமைச்சு பணியாளர்களுக்கு...

அனைத்து இணை இயக்குனர்களுக்கும் நேர்முக உதவியாளர் பணியிடம் வழங்கப்பட வேண்டும். அனைத்து இளநிலை உதவியாளர்களுக்கு பவானி சாகர் பயிற்சி உடனே வழங்க வேண்டும். முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு நிர்வாக அலுவலர் பணியிடம் அமைச்சு பணியாளர்களுக்கு வழங்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்களுக்கு மாவட்ட அளவில் திட்ட அலுவலர் பணியிடம் ஏற்படுத்தி தனி அலுவலகம் உருவாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட செயலாளர் ஜெயகுமார் வரவேற்றார். முடிவில் பொருளாளர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்