மடத்துக்குளம் அருகே அனுமதியின்றி தண்ணீர் விற்பனை குறித்து அதிகாரிகள் ஆய்வு
மடத்துக்குளம் அருகே அனுமதியின்றி தண்ணீர் விற்பனை செய்யப்படுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மடத்துக்குளம்,
மடத்துக்குளம் அருகே உள்ள சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வரும் பெரும்பாலான ஆழ்குழாய் கிணறுகளில் முறையான அனுமதி இன்றி திருட்டுத்தனமாக தண்ணீர் எடுத்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. மேலும் தனியார் கிணறுகளில் தண்ணீர் எடுக்கும் போது தேவையான அனுமதி பெற்று, ஒரு குறிப்பிட்ட அளவோடு மட்டுமே தண்ணீர் எடுக்க வேண்டும். ஆனால் விதிமுறைகளை மீறி தினமும் 10-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் இரவு-பகலாக தண்ணீர் கொண்டு செல்வது இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியது.
இதுதவிர இங்கு எடுக்கப்படும் தண்ணீர் அருகில் உள்ள கோழிப்பண்ணைகள் மற்றும் பிற பகுதிகளில் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி, அருகில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியிடப்பட்டது. மேலும் முறையான அனுமதியுடன், தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறதா? என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன் எதிரொலியாக உடுமலை ஆர்.டி.ஓ. இந்திரவள்ளி மற்றும் மடத்துக்குளம் தாசில்தார் பழனியம்மாள், துணை தாசில்தார் அருள்குமார், வருவாய் ஆய்வாளர் வினோத் குமார், கிராம நிர்வாக அலுவலர் பிரீத்திவ் ராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு நடத்தினர். இதற்காக மடத்துக்குளம் தெற்கு பகுதியில் குமரலிங்கம் சாலையை ஒட்டியுள்ள பகுதியில் தண்ணீர் விற்பனை செய்வதாக கூறிய அனைத்து கிணறுகளையும் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சம்பந்தப்பட்ட புகார் வந்துள்ள கிணறுகளின் உரிமையாளர்களை எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் கிணறுகளின் உரிமையாளர்கள் இனிமேல் முறையான அனுமதி இன்றி தண்ணீர் விற்பனை செய்ய மாட்டோம் என உறுதி உறுதியளித்துள்ளதை தொடர்ந்து இப்பிரச்சினை முடிவுக்கு வந்தது.