ஈரோட்டில் பள்ளத்தில் சிக்கி லாரி கவிழ்ந்தது; மற்றொரு லாரி குழிக்குள் இறங்கியது
ஈரோட்டில், பள்ளத்தில் சிக்கி லாரி கவிழ்ந்தது. மற்றொரு லாரி குழிக்குள் இறங்கியது.
ஈரோடு,
ஈரோடு மாநகர் பகுதியில் பாதாள சாக்கடை பணி, உயர்அழுத்த மின் கேபிள் பதிக்கும் பணி மற்றும் ஊராட்சி கோட்டை கூட்டுகுடிநீர் திட்ட பணி ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக மாநகர் பகுதியில் பல்வேறு ரோடுகளில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் முடிவடைந்ததும் குழிகள் நிரப்பப்பட்டு வருகிறது.
தற்போது ஈரோடு -பெருந்துறை ரோட்டில் உயர்அழுத்த மின் கேபிள் பதிக்கும் பணிக்காக நேற்று முன்தினம் குழி தோண்டப்பட்டு மின்கேபிள் பதிக்கும் பணி நடந்தது. இந்த பணி நேற்று அதிகாலை முடிவடைந்து குழி நிரப்பப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை ஈரோடு ரெயில்வே பணிமனையில் இருந்து 10 டன் புண்ணாக்கு பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று, பெருந்துறை சிப்காட்டில் உள்ள கோழி தீவன ஆலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள சென்னம்பட்டி பகுதியை சேர்ந்த ராமதாஸ் (வயது 58) என்பவர் ஓட்டி சென்றார்.
ஈரோடு -பெருந்துறை ரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகை அருகில் சென்று கொண்டு இருந்தபோது இந்த லாரி திடீரென குழிக்குள் சிக்கி கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த புண்ணாக்கு மூட்டைகள் ரோட்டில் விழுந்தன.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்பட வில்லை. இதன் காரணமாக பெருந்துறை ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்து கிடந்த லாரி மீட்கப்பட்டது. இதனால் பெருந்துறை ரோட்டில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல், ஈரோடு ஸ்டோனி பாலம் பகுதியில் ரோட்டில் சென்று கொண்டு இருந்த சரக்கு லாரி ஒன்று அதன் பின்சக்கரம் குழிக்குள் சிக்கி நகர முடியாமல் நின்றது. அதன் பின்னர் லாரி மீட்கப்பட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக ஈ.வி.என். ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.