மும்பை, தானே உள்பட 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்'
மராட்டிய மாநிலம் தானே மற்றும் ரத்னகிரி மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்ததால், அங்கு பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
மும்பை,
உல்லாஸ் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் சிக்கியது. அதில் இருந்து 1,050 பயணிகள் மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மும்பை நகர் மற்றும் புறநகர் பகுதியில் இடைவிடாத தொடர் மழை அல்லது பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
பலத்த மழை எச்சரிக்கையை அடுத்து மும்பை, தானே, பால்கர், ராய்காட் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல மராட்டிய கடலோர பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ. வேகத்துக்கு காற்று வீசும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.