எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடக்கிறது

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு கடந்த 23–ந் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது.

Update: 2019-07-27 22:30 GMT
எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடக்கிறது

பெங்களூரு, 

கூட்டணி அரசு கவிழ்ந்ததுடன், முதல்–மந்திரி பதவியையும் குமாரசாமி ராஜினாமா செய்தார். பின்னர் நேற்று முன்தினம் முதல்–மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு அமைந்தது. இதையடுத்து, நாளை (திங்கட்கிழமை) சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்–மந்திரி எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். இதுதொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை எடியூரப்பா கூட்டியுள்ளார்.

அதன்படி, பெங்களூரு விதானசவுதாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 3 மணியளவில் முதல்–மந்திரி எடியூரப்பா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பெரும்பான்மையை நிரூபிப்பது குறித்து எடியூரப்பா ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள வசதியாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ரெசார்ட் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்