உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் சாவு
பால் வாங்குவதற்கு தனது மோட்டார் சைக்கிளில் நெல்வாய் கூட்ரோடுக்கு சென்று கொண்டிருந்தார். இரட்டைமங்களம் பள்ளிக்கு எதிரில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
உத்திரமேரூர்,
இது குறித்து உத்திரமேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த சடச்சவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 70). இவர் பால் வாங்குவதற்கு தனது மோட்டார் சைக்கிளில் நெல்வாய் கூட்ரோடுக்கு சென்று கொண்டிருந்தார்.
இரட்டைமங்களம் பள்ளிக்கு எதிரில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து உத்திரமேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.