கும்மிடிப்பூண்டி அருகே ரூ.2 லட்சம் செம்மரக்கட்டைகள் சிக்கின
கும்மிடிப்பூண்டி அருகே ரூ.2 லட்சம் செம்மரக்கட்டைகள் சிக்கின.
கும்மிடிப்பூண்டி,
காஞ்சீபுரம் மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருகிணைந்த சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வேகமாக வந்தது.
போலீசார் வாகனசோதனையில் ஈடுபடுவதை பார்த்ததும் காரில் வந்த டிரைவர் உள்பட 3 பேர் தப்பி ஓடி விட்டனர்.
காரை சோதனை செய்தபோது அந்த காரில் 200 கிலோ எடை கொண்ட 20 செம்மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
கார் மற்றும் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை கும்மிடிப்பூண்டி வனசரகர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.