அனுமதியின்றி கருந்திரி தயாரித்த 3 பேர் கைது; பட்டாசு வைத்திருந்த 2 பேரும் சிக்கினர்
சிவகாசியில் அனுமதியின்றி கருந்திரி தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த 2 பேரும் போலீசாரிடம் சிக்கினர்.
சிவகாசி,
அனுமதியின்றி பட்டாசு கருந்திரி தயாரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையொட்டி சிவகாசி கிழக்கு போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை செய்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற சோதனையில் முருகன் காலனியை சேர்ந்த கருப்பசாமி (வயது 30) என்பவர் கருந்திரி தயாரித்து வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 20 குரோஸ் கருந்திரிகளை பறிமுதல் செய்தனர். இதே போல் சின்னகாமன்பட்டி பகுதியில் நடந்த சோதனையில் பாலமுருகன் (39) என்பவர் சிக்கினார்.
இவரிடம் இருந்து 20 குரோஸ் கருந்திரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிவகாசி புதுத்தெருவில் வசித்து வரும் முனியப்பன் (48) என்பவவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 5 குரோஸ் கருந்திரிகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஞானபிரகாசம் (32) என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் அட்டைபெட்டியில் அனுமதியின்றி சோர்சா வெடிகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை போலீசார் பறிமுதல் செய்து ஞானபிரகாசை கைது செய்தனர். சேவுகன் (48) என்பவரும் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.