தேசிய பெண் குழந்தைகள் தின விருதினை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் வினய் தகவல்
தேசிய பெண் குழந்தைகள் தின விருதினை பெற்றிட (காசோலை ரூ.1 லட்சம் மற்றும் பாராட்டு பத்திரம்) 5 வயதிலிருந்து 18 வயதிற்கு உட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேசிய பெண் குழந்தைகள் தின விருதினை பெற்றிட (காசோலை ரூ.1 லட்சம் மற்றும் பாராட்டு பத்திரம்) 5 வயதிலிருந்து 18 வயதிற்கு உட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். இந்த விருதினை பெற விரும்பும் அரியலூர் மாவட்ட பெண் குழந்தைகள் பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல் வேண்டும். மேலும் ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை, பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்ற வீர தீர செயல் புரிந்தவர்கள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதிக்குள் தங்களது விவரத்தை விண்ணப்பமாக அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளத்தில் அறை எண்.20-ல் உள்ள சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.