நீட், ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரம்; காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது, அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
நீட், ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது என அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசின் செயல்பாடு தொடர்ந்து முன்னுக்குப்பின் முரணாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளித்தது. தற்போது மக்கள் நலன் எனக்கூறி அதனை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர். இதில் காங்கிரஸ் அரசு இரட்டை வேடம் போடுகின்றது.
மத்திய அரசு பொருளாதார ரீதியான இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளது. இதனை அமல்படுத்துவதாக ஒப்புக்கொண்டு அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடங்களை கூடுதலாக பெற்றும் வந்துள்ளது. ஆனால் சட்டசபையில் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினால் இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கருத்து கேட்டு முடிவு செய்வோம் என்று முதல் அமைச்சர் கூறியுள்ளார். பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்து மறு ஆய்வு செய்ய எம்.எல்.ஏ.க்கள் உயர்மட்ட குழு அமைக்க வேண்டும்.
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை தரம் திட்டமிட்டு குறைக்கப்பட்டு வருகின்றது. அங்கு பணிபுரியும் ஒப்பந்த மருத்துவர்களுக்கு கடந்த 5 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். கடந்த 2 மாதமாக அறுவை சிகிச்சை கூடம் மூடப்பட்டு உள்ளது. சிறப்பு மருத்துவர்களுக்கு பல மாநிலங்களில் மாதம் ரூ.4 லட்சம் வரை சம்பளம் தருகின்றனர். ஆனால் புதுச்சேரியில் ரூ.80 ஆயிரம் வரை மட்டுமே கொடுக்கின்றனர்.
எனவே சிறப்பு மருத்துவர்கள் புதுச்சேரியில் பணியாற்ற முன்வருவதில்லை. இதன் காரணமாக அரசு பொது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பலர் இறந்துவிடுகின்றனர். உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.