கோப்புகளை பார்ப்பது மட்டுமே வேலை அல்ல: மக்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் - அதிகாரிகளுக்கு கிரண்பெடி கண்டிப்பு
அலுவலகத்தில் இருந்து கோப்புகளை பார்ப்பது மட்டுமே வேலை அல்ல; பொதுமக்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளை தீர்க்கவேண்டும் என்று அதிகாரிகளை கவர்னர் கிரண்பெடி கண்டித்தார்.
வில்லியனூர்,
புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு பணி மேற்கொள்வது வழக்கம். ஆனால் கடந்த சில வாரங்களாக ஆய்வு மேற்கொள்ளாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் கிராமத்துக்கு சென்று கிரண்பெடி ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள சமுதாய நலக்கூடத்தை மகளிர் சுய உதவி குழுவினரிடம் ஒப்படைத்து முறையாக அதனை பராமரிக்க வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை குழுவின் முன்னேற்றத்துக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
அப்போது அந்த ஊர் மக்கள் கவர்னர் கிரண்பெடியிடம், அங்குள்ள தாமரைக் குளம் தூர்வாருவதில் தவறு நடப்பதாக புகார் தெரிவித்தனர். அதைக் கேட்டதும் அதிகாரிகளுடன் சென்று அந்த குளத்தை கவர்னர் பார்வையிட்டார். சிறிய தவறுக்குகூட இடம் கொடுக்காமல் இந்த குளத்தை தூர்வார வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
தாமரைக்குளம் அருகில் உள்ள மற்றொரு குளம் ஆக்கிரமிக்கப்பட்டு, குப்பைகள் கொட்டப்பட்டு சீர்கெட்டுக் கிடப்பதை கவர்னரிடம் மக்கள் சுட்டிக்காட்டினர். உடனே கவர்னர் அந்த குளத்துக்கு சென்று பார்வையிட்டார். அப்போது உடனிருந்த வில்லியனூர் துணை கலெக்டர் சஸ்வத் சவ்ரவை பொதுமக்கள் முன்னிலையிலேயே கண்டித்தார்.
அலுவலகத்தில் அமர்ந்து கோப்புகளை பார்ப்பது மட்டுமே அதிகாரிகளின் வேலை அல்ல. மக்களை நேரில் சந்திக்க வேண்டும். களத்திற்கு வந்தால்தான் பிரச்சினைகளை தீர்க்கமுடியும் என கூறி அவரை கண்டித்தார். அந்த குளத்தை தூர்வாரி சீர்செய்யவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதோடு உடனடியாக அந்த பணியை தொடங்கும் வகையில் கவர்னர் கிரண்பெடி அப்பகுதி பெண்களுடன் இணைந்து அந்த குளத்தில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கைகளுக்காக கிரண்பெடிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.